தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, உன்னுடைய லட்சியத்தை அடைய நீ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய கடும் முயற்சிகளால் உனக்கு இதுவரை ஏதாவது பலன் கிடைத்துள்ளதா என்று யோசித்துப் பார். நீ வீணாக ஏன் இவ்வாறு சிரமப்படுகிறாய்? உன்னைப் பார்த்தால் எனக்கு தர்மதாசின் கதை ஞாபகம் வருகிறது. அவனுடைய கதையைக் கூறுகிறேன் கேள்" என்றது. |
|
|