தன் முயற்சியில் சற்றுந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர், அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் விக்கிரமனிடம், "மன்னா! உன்னைப் போல் பாடுபடுபவர்கள் எதைக்கண்டும், முக்கியமாக அழகானப் பெண்ணைக் கண்டு, சபலப்பட்டு சறுக்காமல் இருக்க வேண்டும். ஹேமச்சந்திரன் என்ற மன்னன் அஞ்சாநெஞ்சன்! மிகுந்த மனஉறுதி படைத்தவன். ஆனால், அவனுடைய வைராக்கியம் ஓர் அழகிய பெண்ணின் முன் சீர்குலைந்தது, அவன் கதையைக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லலாயிற்று. |
|
|