குந்தள ராஜ்யத்தின் மந்திரியின் பிள்ளை சசிகாந்தன் ஒரு நாள் தன் நண்பர்கள் பத்ரி, ஜெயந்தன் அகிய இருவருடன் வேட்டையாடக் காட்டுக்குச் சேன்றான். சசிகாந்தன் சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளைத் தேடி அலைந்தான். அவர்கள் தேடியலைந்த விலகுங்கள் எதுவுமே சிக்காததால், அவர்கள் காட்டினுள் ஊடுருவி தொலைதூரம் சேன்றனர். அங்கு ஓரிடத்தில் ஒரு பெரிய மலையிலிருந்து விழுந்து கொண்டிருந்த அருவி ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் ஒரு சிங்கம் நீர் அருந்திக் கொண்டு இருந்ததைப் பார்த்த சசிகாந்தன் உற்சாகமடைந்தான். "நண்பர்களே! நாம் நமது குதிரைகளை இங்கேயே விட்டுவிட்டு அக்கரைக்குச் சேன்று அந்த சிங்கத்தைச் சூழ்ந்து கொள்வோம். மூவரும் அதன் மீது அம்புகளை எதினால், யாராவது ஒருவருடைய அம்புக்கு அது பலியாகும்" என்றான் சசிகாந்தன். உடனே அவன் தன் குதிரையை விட்டுக் கீழே இறங்கி ஆற்றை நோக்கிச் சேல்ல முற்பட்டான். மற்ற இருவரும் குதிரையில்இருந்துஇறங்கி அவனைப் பின்தொடர்ந்தனர். சற்று விரைவாகச் சேன்ற ஜெயந்தன் சசியின் தோளைப்பற்றி "அவசரப்படாதே! ஆற்றின் இக்கரையுடன் நமது குந்தள ராஜ்ய எல்லை முடிந்து விடுகிறது. அக்கரையில் இருந்து கடம்பராஜ்யம் தொடங்குகிறது. கடம்ப நாட்டுக்கும் நமக்கும் வெகுகாலமாகவே விரோதம் இருந்து வருகிறதை நீ அறிவா. அதனால் பகைவர்களின் எல்லைக்குள் சேல்வது நமக்கு ஆபத்தாக முடியும். வேட்டையாட வந்த நம்மையே நம் பகைவர்கள் வேட்டையாடி விடுவார்கள்" என்றான். |
|
|