ipad/iphonetopBanner

கதைகள்

மகான்களின் வாழ்விலிருந்து சில நிகழ்ச்சிகள்(9)

ஆசிரியர்: அம்புலிமாமா | 28th Apr, 2008


வாரணாசியில், கங்கை நதிக்கரையில் 130 ஆண்டுகள் வசித்த அந்தயோகி 1887ஆம் ஆண்டு இந்த மண்ணுலக வாழ்வை நீத்தார். அவர் எப்போது பிறந்தார் என்று யாருக்குமே தெரியாது. ஆந்திர மாநிலத்தில் விஜயநகரத்திற்கு அருகேயுள்ள ஹோலியா எனும் கிராமத்தில் அவர் தோன்றினார். யோகியின் பூர்வீகத்தை அறிந்தவர்கள் அவர் பிறந்த ஆண்டு 1607 என்று கூறுகின்றனர். நரசிங்கராவ், வித்யாவதி தேவி ஆகியோருக்குப் பிறந்த அவரின் இயற்பெயர் சிவராம். அவரது பெற்றோர் சிவபெருமானின் தீவிர பக்தர்களாக இருந்து வந்தனர். சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் பற்று கொண்ட சிவராம், பெரியவரானதும் ராஜஸ்தான் சென்று ஓர் ஆசானிடம் ஞானமார்க்கத்தில் விழிப்புணர்வை அடைந்தார். அவருடைய ஆசான் அவருக்கு கணபதி சரஸ்வதி என்று பெயரிட்டார். பிறகு வாரணாசி சென்றடைந்த கணபதி அங்கேயே தன் எஞ்சிய நாள்களைக் கழித்தார்.

வாரணாசியில் அனைவரும் அவரை தைலங்க சுவாமி என்று அழைத்தனர். பழங்காலத்தில் பீகார், வங்காளம், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முறையே அங்கம், வங்கம், கலிங்கம், தைலங்கம் என்று அழைக்கப் பட்டன. ஆந்திராவிற்குத் தைலங்கம் என்று பெயர் இருந்ததால், அவரை தைலங்கசுவாமி என்று அழைத்தனர். முற்றும் துறந்த யோகியாக இருந்ததால், அவர் ஆடை எதுவும் அணிவதில்லை.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner