ipad/iphonetopBanner

கதைகள்

கிழவனுக்கா கல்யாணம்?

ஆசிரியர்: அம்புலிமாமா | 5th Dec, 2011


 கிருஷ்ணசர்மா வேறு ஊரிலிருந்த தன் நண்பரான ராமசர்மாவைக் காணச் சென்றார். அங்கு அவர் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் அந்த நண்பரின் இரண்டு வயது பெண் குழந்தை மழலை பேசி ஓடி வந்தது. நல்ல சிவப்பு நிறமாயும் ‘கொழு கொழு’ என்று வளர்ந்திருந்த அப்பெண் குழந்தையைக் கண்டு கிருஷ்ணசர்மா மகிழ்ந்து போனார்.

அவர் ராமசர்மாவிடம், "இவள் உங்கள் மகளா?" என்று கேட்கவே, ராமசர்மாவும் "ஆம். இவளுக்கு இரண்டு வயதாகிறது," என்றார். கிருஷ்ணசர்மாவும், "எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. என் நான்கு வயது மகனுக்கு இவளை கல்யாணம் செய்துவிடலாம். இப்போதே நிச்சயித்துவிடலாமா?" என்று கேட்டார்.

அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.

கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.




தொடர்புடைய கதைகள்

BannerBanner