ipad/iphonetopBanner

கதைகள்

வயலில் ரயில்!

ஆசிரியர்: அம்புலிமாமா | 2nd Nov, 2009


 

நம்ம ஜீனியஸ் கோயிந்துவுக்கு ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக வேலை கிடைத்து விட்டது. முதல் நாள் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு பயணிகள் ரயிலை ஓட்டுகிறார். அப்போது திடீரென தண்டவாளத்திலிருந்து வெளியேறி பக்கவாட்டில் இருந்த வயலுக்குள் ரயில் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. நல்ல வேளை யாருக்கும் அடிபடவில்லை...ஜீனியஸைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கும் போது....

 

போலீஸ்: எதுக்குய்யா வேணும்னே தண்டவாளத்துல இருந்து ரயிலை வயலுக்கு திருப்புன?

 

ஜீனியஸ்: தண்டவாளத்துல ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். அவனை காப்பாத்துறதுக்காகத் தான் ரயிலைத் திருப்பினேன்.

 

போலீஸ்: அட முட்டாளே...ஒருத்தனை காப்பாத்தப் போய் 500 பேரை கொல்லப் பாத்தியே.. அவன் ஒருத்தன் உயிர் தான் முக்கியமா? அவன் மேல மோதிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே...?

 

ஜீனியஸ்: நானும் இதையே தான் சார் நினைச்சேன். ரயில் அவன் கிட்ட நெருங்கும் போது அலறிகிட்டு வயல்ல இறங்கி ஓடுனான். இவ்ளோ உயிர்களை விட அவன் ஒருத்தன் உயிர் பெரிசில்லைன்னு நினைச்சி, அவனை மோதிட்டு போறதுக்காக ரயிலை வயல்ல இறக்கிட்டேன்!

 

போலீஸ்: .................


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner