ipad/iphonetopBanner

கதைகள்

'வீட்டுக்கு போக மாட்டோம்'

ஆசிரியர்: அம்புலிமாமா | 23rd Oct, 2009


 

வேலையில் அதிக காலம் நீடிக்காமல் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் அமெரிக்கர்கள்....அவர்களது சொகுசான வாழ்க்கையை பொருளாதாரச் சரிவு தலைகீழாக்கி விட்டிருருக்கிறது. பணி ஓய்வுக்கான வயதை எட்டினாலும், "இன்னும் கொஞ்ச வருஷம் வேலை செஞ்சிக்கிறேனே" என கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

பொருளாதார சரிவு தொடங்கியது முதலே, அமெரிக்காவில் அனைவரது வாழ்க்கைத் தரமும் சரியத் தொடங்கி விட்டது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால், வேறு வழியின்றி தங்கள் சேமிப்புகளை அமெரிக்கர்கள் கரைக்கத் தொடங்கி விட்டனர். இப்போது சேமிப்புகள் காலியானதும், இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பெரும்பாலான அமெரிக்கர்கள் பங்குகளிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளதால், இத்துறைகளின் சரிவில் சிக்கிக் கொண்டிருப்பதால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளனர். 

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட தாம்ப்சன் என்ற 65 வயது ஊழியர், "வேலை செய்யணும்னு எங்களுக்கு என்ன ஆசையா.. சேமிப்பு எல்லாம் கரைஞ்சி போச்சி. நான் இன்னும் 5 வருஷம் வேலை செஞ்சாகணும்" என்றார். இதே கருத்தை அங்குள்ள 70 சதவீத மூத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்குறைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முழுமூச்சுடன் இறங்கியிருக்கும் இந்த நிலையில், ஊழியர்களின் இந்த முடிவால் நிறுவனங்கள் முழி பிதுங்கியுள்ளனர்.

வேலை தேடிக்கொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களும் இந்த செய்தியால் கொதித்துப் போய் போராடத் தயாராகிவிட்டனர்.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner