ipad/iphonetopBanner

கதைகள்

தொழிலாளியின் வயிற்றில் 1/2 கிலோ இரும்பு!

ஆசிரியர்: அம்புலிமாமா | 13th Nov, 2009


தொழிலாளியின் உடம்பு இரும்பு மாதிரி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதை உண்மையாக்குவதாகக் கூறி, 5 அங்குல ஆணிகள் உள்பட அரை கிலோ இரும்பைத் தின்று ஏடாகுடமாக அவஸ்தைப் படுகிறார் ஒரு தொழிலாளி. இங்கல்ல, பெரு நாட்டில்.

 

பெரு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள காஜாமர்கா நகரத்தைச் சேர்ந்தவர் ரிக்வெல்மி அபான்டோ. கட்டிடத் தொழிலாளியான இவர், தன்னுடைய உடம்பு இரும்பைப் போன்றது என்று நண்பர்களிடம் கூறி வந்திருக்கிறார். இதை யாரும் பொருட்படுத்தாததால் டென்ஷனான அபான்டோ, தான் ஒரு இரும்பு மனிதன் என்பதை நிரூபிக்க, பல பேர் முன்னிலையில் 5 அங்குல ஆணிகள் மூன்றை விழுங்கியிருக்கிறார்.

 

அனைவரும் பாராட்டியதால் குஷியான அபான்டோ, தொடர்ந்து அவ்வப்போது துருப்பிடித்த இரும்புத் துண்டுகள், கம்பிகள், நாணயங்கள், பழைய இரும்பு தகடுகள் என சகட்டுமேனிக்கு அள்ளித் தின்றுள்ளார். சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அபான்டோவை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றிலிருந்து அரை கிலோ எடை கொண்ட இரும்பை அகற்றினர். வயிற்றில் ஓட்டை விழுந்திருப்பதால் அபான்டோ தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

 

"இது போன்ற தடைகளால் நான் துவள மாட்டேன். எனது சாதனையைத் தடுக்க முயற்சி நடக்கிறது. அதை முறியடித்து பயணத்தைத் தொடர்வேன்" என்று மருத்துவமனையில் இருந்து கொண்டே அவர் அளித்த பேட்டி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சிரிப்பையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner