ipad/iphonetopBanner

கதைகள்

பாசக்காரத் தந்தை ஒபாமா!

ஆசிரியர்: அம்புலிமாமா | 6th Nov, 2009


 "நாட்டுக்கே ராஜாவானாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தான் முதன்மையானது" என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா நிரூபித்துள்ளார். தனது பெண் படிப்பில் மந்த நிலையில் இருந்தபோது கவலை அடைந்ததையும், தற்போது அதிக மதிப்பெண்கள் எடுப்பதையும் ஒரு பாசமுள்ள தந்தையாக அனைவரிடமும் பெருமையுடன் கூறி வருகிறார்.

ஒபாமா பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதற்கான விருந்து நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தைப் பற்றி பேசும்போது, "6ம் வகுப்பு படிக்கும் என் மகள் மெலியா, பள்ளி தேர்வுகளில் அறிவியல் பாடத்தில் மிகவும் பின்தங்கியிருந்தாள். அதன் பின் 73 மதிப்பெண்கள் பெற்றாள். பொதுவாழ்க்கையில் இருந்தாலும் அவளது படிப்பு குறித்த கவலை அதிகமாக இருந்தது எனக்கு" என்று பேசினார்.

அத்துடன் நில்லாமல், "எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த நிலை என்பதை அறிந்தேன். பிறகு மெல்ல மெல்ல அவளுக்கு எடுத்துச் சொல்லி படிப்பில் கவனம் செலுத்த வைத்தேன். நான் எடுத்துச் சொல்லி ஊக்கம் கொடுத்ததை புரிந்து கொண்டாள். இப்போது மெலியா அறிவியல் பாடத்தில் 93 எடுத்திருக்கிறாள். அமெரிக்காவின் அதிபர் என்பதைக் காட்டிலும், ஒரு தந்தையாக இது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி" என்றார்.

ஒபாமாவின் பிள்ளைப் பாசத்தை அனைத்து அமெரிக்க பத்திரிகைகளும் வெளியிட, அமெரிக்காவில் அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner