ipad/iphonetopBanner

கதைகள்

குப்பையோடு குப்பையாக தூங்கிய பெண்!

ஆசிரியர்: அம்புலிமாமா | 3rd Jul, 2009


 

கண்ட நேரட்தில், கண்ட இடத்தில் தூங்கினால் குப்பையாய் போவாய்' என்ற பழமொழியை உண்மையாக்கியிருக்கிறார் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணி. தென் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள குட்வில் தொழிற்சாலையில் பணிபுரியும் அந்த 48 வயதாகும் பெண், இரவு அங்குள்ள குப்பைகளைச் சுத்தம் செய்து வெளியில் உள்ள பெரிய குப்பைத் தொட்டிக்குள் கொட்டியிருக்கிறார்.

உயரம் அதிகமுள்ள அந்தத் தொட்டிக்குள் கால் இடறி விழுந்துள்ளார். விழுந்த அதிர்ச்சியில் தொட்டியின் மூடி பூட்டிக் கொண்டது. சிறிது நேரம் கத்திக் கூச்சலிட்ட அந்தப் பெண், சிறிது நேரத்துக்கெல்லாம், குப்பைகளுக்கு நடுவில் ஹாயாக தூங்கியிருகிறார். விடிந்ததும், குப்பை லாரி அங்கு வந்து தொட்டியிலுள்ள குப்பையை தானியங்கி கருவி மூலம் லாரியில் அள்ளிக் கொட்டியிருக்கிறது.

அந்த நேரத்திலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பெண், குப்பையோடு குப்பையாக கிடங்கில் மொத்தக் குப்பைக் கழிவுகளோடு சேர்த்து கொட்டப்பட்டிருக்கிறார். சிறிது நேரத்துக்கெல்லாம் உறக்கம் கலைந்து குப்பைக்குள் இருந்து வெளியே வந்த பெண்ணைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இன்னும் சிறிது நேரம் தூங்கியிருந்தால் குப்பைகளை அழிக்கும் இயந்திரத்துக்குள் நசுங்கியிருக்க வேண்டிய அந்தப் பெண்ணை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner